"உன்னுடைய மனைவி எல்லா கோயிலுக்கும் போறாங்க.. வீட்டில் நவராத்திரி கொலு நடத்துறாங்க.. உன் பெயரில் அர்ச்சனை செய்கிறார்.. நீ மட்டும் அடுத்த சாமி கும்பிட போகாதே., திருநீர் வைக்காதே... குங்குமம் வைக்காதே... நாமம் போடாதே என கிண்டலும், கேலியும் பேசுறே.. உங்கள் வீட்டிற்கு புட்டபர்த்தி சாய்பாபா வரும்போது உங்கள் தாயார் "தயாளுஅம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கிக்கிட்டாங்களே.. மடிப்பிச்சை போல் வாங்கினார். என்று மிகவும் கீழ்த்தரமாக, ஒருமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாக பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அரண்மனை நாயே அடக்குட உன் நாவை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை தடித்து பேசியிருந்தார் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.அடுத்ததாக சங்கி என விமர்சனம் செய்திருந்தார் ஸ்டாலின்.இவரைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜியை வருத்தெடுத்திருந்தனர். இதன் உச்ச கட்டம் தான் இன்றைக்கு ஒருவரை ஒருவர் ஒருமையிலும் தடித்த வார்த்தையிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.திமுக அதிமுக வினர் ஒருமையில் பேசும் பேச்சுக்களை பொதுமக்கள் முகம் சுழித்துதான் பார்த்து படித்தும் கொண்டிருக்கிறார்கள். 

மதுரையில் அழகிரி ஸ்டாலின் விரிசல் உச்சமாக இருந்த போது "இது என் ஏரியா உள்ளே வராதே" என்று போஸ்டர் அடித்து ஓட்டினார் அழகிரி ஆதரவாளர்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு அமைச்சர் கட்சி தலைவரை நீ என் ஊருக்கு வந்து பாரு" சொடக்கு போட்டிருப்பது அரசியலில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசிய போது...அமைச்சர் என்பதையும் மறந்துபோய், தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியது, திமுக தரப்புக்கு மட்டுமல்லலாமல் பொதுமக்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 "இது என்ன பொழப்பு. தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீரை கீழே கொட்டறார்.. ஒரு பள்ளிவாசலுக்கு போனால், நோன்பு கஞ்சி குடிக்க கொடுத்தால், குடிக்கணும்.. குடிக்க மறுத்தால் பள்ளிவாசலுக்கு உள்ளே போகாதே.. சர்ச்சுக்குள்ள ஸ்வீட் கொடுத்தால் அதை சாப்பிடணும்.. பிடிக்கவில்லையா அங்கே போகாதே.

அந்த மாதிரி தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீறு கொடுப்பது வழக்கம். அங்கே தீபாராதனை காட்டி திருநீறு தருவாங்க.. அம்மா புரட்சித்தலைவி அங்கே போயிருக்காங்க.. அவருக்கும்தான் திருநீறு தந்தாங்க. மனசார வாங்கி நெற்றியில் பூசிக்கிட்டாங்களே.. ஸ்டாலினுக்கு பிடிக்கலையா, பக்கத்தில் இருக்கிறவங்ககிட்ட தந்திருக்கலாம்.. இல்லேன்னா திருநிறு பூசுறது எனக்கு வழக்கம் இல்லைன்னாவது சொல்லி இருக்கலாம்.. கேட்டால் கொள்கைன்னு சொல்றார்.. என்ன கொள்கை இருக்கு ஸ்டாலினுக்கு?

உன்னுடைய மனைவி எல்லா கோயிலுக்கும் போறாங்க.. வீட்டில் நவராத்திரி கொலு நடத்துறாங்க.. உன் பெயரில் அர்ச்சனை செய்கிறார்.. நீ மட்டும் அடுத்த சாமி கும்பிட போகாதே., திருநீர் வைக்காதே... குங்குமம் வைக்காதே... நாமம் போடாதே என கிண்டலுமர, கேலியும் பேசுறே.. உங்கள் வீட்டிற்கு புட்டபர்த்தி சாய்பாபா வரும்போது உங்கள் தாயார் தயாளுஅம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கிக்கிட்டாங்களே.. மடிப்பிச்சை போல் வாங்கினார்.பக்கத்தில் கலைஞரும்தான் உட்கார்ந்திருந்தார்.. துரைமுருகன் அண்ணாச்சி கூட ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டார். என்ன பெரிய நாத்திகம் பேசுகிறீங்க... நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே.. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே. இந்து கோயிலுக்கு போகாதே.. எங்காவது ஒரு இடத்துக்கு போறது, அங்க போயி கேவலப்படுத்துறது?


70 வருஷத்துல திருக்குவளையில் உன் சொத்து என்ன? ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடு.. அன்னைக்கு திருட்டு ரயில்ல ஏறி வந்தார் ஐயா.. அன்னைக்கு டிக்கட் 5 ரூபாய்.. 5 ரூபாய் இல்லாம வந்த குடும்பத்துக்கு இப்போ என்ன சொத்து?" என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்.