ஜெயலலிதா இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கடைசியாக என்ன பேசினார் என்ற கேள்விக்கு மருத்துவர்கள் பரபரப்பு பதிலளித்துள்ளனர்.

ஜெயலலிதா எப்போது பேசா ஆரம்பித்தார் எப்போது வரை பேசினார் , கடைசியாக இறப்பதற்கு முன்னர் என்ன பேசினார் என்ற கேள்விக்கு பதிலளித்த அப்போலோ மருத்துவர் பாபு கூறியதாவது:

ஜெயலலிதா ஆரம்பத்தில் வெண்டிலேட்டர் சிகிச்சையிலிருந்து மீண்ட பின்னர் பேச ஆரம்பித்தார். இயல்பாகத்தான் இருந்தார். சாதாரணமாக தயிர் சாதம் சாப்பிட்டார். பேசினார் , டிவி பார்த்தார்.நடக்க ஆரம்பித்தார்.

அவர் சோர்வாக இருந்ததால் சில அடிகள் மட்டுமே எடுத்து வைப்பார். டிச. 4 அன்று மதியம் பிசியோ தெரபி சிகிச்சைக்கு பின்னர் சோர்வாக காணப்பட்ட அவர் எங்களை அழைத்தார். மூச்சுத்திணறுவதாக கூறினார். இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

அதுதான் அவர் கடைசியாக பேசியது அதுதான் என்று மருத்துவர் பாபு தெரிவித்தார்.