ஜெயலலிதாவை யார் யார் சந்தித்தார்கள் என்ற கேள்விக்கு கவர்னர் நேரடியாக பார்த்தார் என்று மருத்துவர் கூறி செய்தியாளர்களிடம் சிக்கி கொண்டார்.

ஜெயலலிதாவை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் பாலாஜி பல பேர் பார்த்தார்கள் கவர்னர் கூட பார்த்தார் என்று பதிலளித்தார். 

ஆனால் கவர்னர் ஜெயலலிதாவை பார்க்க வில்லை என்று தான் அறிக்கை வெளியிட்டார் என்று கேட்டனர். அதற்கு தடுமாறிய டாக்டர் பாலாஜி இல்லை முதலில் பார்க்கவில்லை அவர் இரண்டாவது முறை பார்த்தார். கண்ணாடி வழியாக வெளியே நின்று பார்த்தார் என்று மழுப்பினார்.