கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்  டாக்டர் பிரதீபா உயிரிழந்துள்ள நிலையில் அவரது குடும்பத்துக்கு அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.   சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் இறுதியாண்டு படித்தவர் பிரதீபா , இவரின்  சொந்த ஊர் வேலூர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவ இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கொரோனா  தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்ட வருகின்றனர் .  அவ்வாறு மாணவி பிரதீபாவும் கொரோனா  பணியில் ஈடுபட்டு வந்தார் ,  இந்நிலையில்  பல மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர் .  கடந்த ஒரு மாத காலமாக கொரோனா சிகிச்சை பிரிவில்  பிரதீபா பணியாற்றி வந்தார் . இந்நிலையில்  இன்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக  பிரதீபாவின் தோழி அவரின் அறையை திறக்க  முற்பட்டார், ஆனால் அவரது அறை   உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்த து  ஆனால்  நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை . 

இதனையடுத்து  காவலாளிகள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்தார் பிரதீபா,  அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இதனையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . முதல்நாள் இரவு பெற்றோர்களிடம் பேசிய அவர் வேலைப்பளு அதிகமாக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில்  காலையில் பார்க்கும்போது அவர் இறந்து கிடந்தார்,  ஆனால் பிரதீபா எந்த முறையில் மரணமடைந்தார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது ,  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டு  சமூக சமத்துவத்திற்காக மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திர நாத்,  மருத்துவ பயிற்சி மாணவி   பிரதீபா இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிற்சி மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு மாணவர்கள்,மருத்துவர்களின், பணிச் சுமை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. 

அவர்களுக்கு தொடர்ச்சியாக 6  மணி் நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். தொடர்ச்சியாக 12 மணி நேர,24 மணி நேர பணிகள் வழங்குவதை கைவிட வேண்டும். கொரோனா மற்றும் கொரோனா அல்லாத சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவக் குழுவினருக்கு தொடர்ந்து 7 நாட்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும்.7 நாட்கள்  பணிக்குப் பிறகு 14 நாட்கள் தனித்திருக்க ( Quarantine)உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 95 விழுக்காட்டினர் ,கோவிட் 19 நோயின் அறிகுறிகள் இல்லாமல் உள்ளனர். எனவே, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக் கூடிய அனைவருக்குமே கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகிச்சை வழங்க வேண்டியுள்ளது. எனவே, கொரோனா மற்றும் கொரோனா அல்லாத சிகிச்சை பிரிவுகளிலும் , பணியாற்றும் மருத்துவக் குழுவினருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ,பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு ஏற்பட்ட மருத்துவக் குழுவினரை 14 நாட்கள் தனிமைப் படுத்த வேண்டும். அவர்களுக்கு 5 ஆவது மற்றும் 14 ஆவது நாட்களில் RT PCR பரிசோதனைகள் செய்திட வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.