Asianet News TamilAsianet News Tamil

அரசு உயர் அதிகாரிகள்தான் வாழ்றாங்கப்பா.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி சம்பளம் தெரியுமா?...

Do you know the President the Vice Presidents salary
Do you know the President, the Vice President's salary?
Author
First Published Nov 19, 2017, 5:06 PM IST


நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி, அடுத்த இடத்தில் இருக்கும் துணை ஜனாதிபதி ஆகியோரைக் காட்டிலும், மத்திய அரசின் உயர் அதிகாரப் பதவியில் இருக்கும் அதிகாரிகள்தான் அதிகமாக ஊதியம் வாங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சம்

7-வது ஊதியக்குழு அமல்படுத்தியப்பின்பு, அதிகாரிகளின் ஊதியம் உச்ச பட்சமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் , மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தபோதிலும், கடந்த ஒரு ஆண்டாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் இருக்கிறது.

ரூ.1.50 லட்சம்

தற்போது ஜனாதிபதி மாதம் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சமும், துணை ஜனாதிபதி ரூ.1.25 லட்சமும், மாநில ஆளுநர்கள் ரூ.1.10 லட்சமும் ஊதியமாகப் பெறுகிறார்கள்.

ரூ.2.50 லட்சம்

அதேசமயம், 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டபின், நாட்டின் உயரிய அரசுப்பதவியில் இருக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் மாதத்துக்கு ரூ.2.50 லட்சமும், செயலாளர் ரூ.2.25 லட்சமும் ஊதியமாகப் பெறுகிறார்.

தளபதிகளுக்கு அதிகம்

ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றுக்கு தலைவரா ஜனாதிபதி இருந்தபோதிலும், அந்த படைகளின் தளபதிகளைக் காட்டிலும அவர் குறைவாக ஊதியம் பெற்றுவருகிறார். அதேசமயம், முப்படைத் தளபதிகளின்ஊதியம் அமைச்சரவைச் செயலாளருக்கு இணையாக வழங்கப்பட்டு வருகிறது.

பரிந்துரை

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரைக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் செய்துள்ள பரிநதுரையின்படி, “ ஜனாதிபதிக்கு மாத ஊதியும் ரூ.5 லட்சமாவும், துணை ஜனாதிபதிக்கு ரூ.3.50 லட்சமாகவும், மாநில அளுநர்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயர்த்த கூறப்பட்டுள்ளது.

2008

கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதி, துணைஜனாதிபதி, ஆளுநர்கள் ஆகியோருக்கு  ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின் 9 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2008ன்போது ஜனாதிபதிக்கு ரூ.50 ஆயிரமும், துணை ஜனாதிபதிக்கு ரூ.40 ஆயிரமும், ஆளுநர்களுக்கு ரூ.36 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகள், மறைந்த ஜனாதிபதிகளின் மனைவி, முன்னாள் துணை ஜனாதிபதி, மறைந்த துணைஜனாதிபதியின் மனைவி, முன்னாள் ஆளுநர்கள் ஆகியோருக்கான ஓய்வூதியமும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios