தி.மு.க., எம்.எல்.ஏ.,வான கு.க.செல்வம் கட்சியிள் ஏற்பட்ட அதிருப்திஆஆள் பா.ஜ.க தலைவர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது தி.மு.க., பிரமுகர்கள் சிலர் அவரிடம் 'ஏதும் பிரச்னை என்றால் எங்களிடம் சொல்லி இருக்கலாமே... சரி, திரும்பி வாருகிறீர்களா? எனக் கேட்டிருக்கிறார்கள். பதிலுக்கு எதுவும் பேசாமல் பெரிய கும்பிடை போட்டுவிட்டு கிளம்பி விட்டார் கு.க.செல்வம்.

 

அதே நேரம், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அவரிடம், 'பா.ஜ.கவில் சேர்ந்து விட்டீர்கள். ஹிந்தி தெரியுமா? என கிண்டல் அடித்திருக்கிறார்கள். அவர் பதிலுக்கு 'பாரத் மாதா கீ ஜே' எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார். உடனே தி.மு.க.,வினர் திரும்பி பார்க்காமல் போய் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, 
கு.க.செல்வம் அலுவலக வாசலில் வாஜ்பாய் படம் ஓட்டப்பட்டுள்ளது. கூடவே அண்ணா, கலைஞர் படங்களும் ஒட்டப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ., பதவிக்கும் ஆபத்து வந்துவிடக்கூடாது, பாஜகவின் நம்பிக்கைக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஜெ.பி.நட்டா, மோடி ஆகியோரிடன் படங்களை ஒட்டாமல், திமுகவினர் மதிப்பு வைத்திருந்த வாஜ்பாய் படத்தை கு.க.செல்வம் ஒட்டியுள்ளார் என்கின்றனர் அந்த பகுதியைச் சேர்ந்த கட்சியினர்.