வேறுஜாதி பெண்கள் உங்களை விரும்பினால் கூட நீங்கள் ஒதுங்கி விடுங்கள் என தனது இன இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 

பரமக்குடி அருகே இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ‘’வேறுஜாதி பெண்கள் உங்களை விரும்பினால் கூட நீங்கள் ஒதுங்கி விடுங்கள். நாம் முன்னேற வேண்டியுள்ளது’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதனையடுத்து அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இம்மானுவேல் ராமநாதபுரத்தில் மறைந்த மாவீரன் மட்டுமல்ல, இந்த உலகமே புகழும் ஒரு வீரனாகவே கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். மு.க.ஸ்ஆஆளீண் அவர்களே இது எல்லாம் உங்க துண்டு சீட்டில் இல்லையா.? தியாகி இம்மானுவேல் சேகரனார் விதைக்கப்பட்ட மண்ணிலிருந்து எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற சபதம் எடுத்தோம். 

வெளியேறும் வரை ஓயமாட்டோம். பிற்படுத்தப்பட்டர்கள் எல்லாம் ஒரே சாதியாகப் பார்க்கப்படுவதில்லை. இடஒதுக்கீட்டை அனுபவித் தாலும், வெளியே வன்னியர், தேவர், நாடார் என கௌரவமாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், எஸ்.சி. அனைவரும் ஒரே சாதியினராகப் பார்க்கப்படுகிறார்கள். ‘அவன் எஸ்சி’ என கூசாமல் சொல்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.