Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு: கடிதம் எழுதி ஏமாற்ற வேண்டாம்; அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பாய்ந்த திமுக தலைவர் ஸ்டாலின்.!

நீட் தேர்வை நடப்பாண்டு கைவிடக் கோரி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்இந்தநிலையில் நீட் வேண்டாம் என கடிதம் எழுதி ஏமாற்ற வேண்டாம் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விமரிசித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

Do not cheat by writing the letter; Stalin, the DMK leader who attacked Minister Vijayabaskar!
Author
Tamilnadu, First Published Aug 27, 2020, 8:20 AM IST

​நீட் தேர்வை நடப்பாண்டு கைவிடக் கோரி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்இந்தநிலையில் நீட் வேண்டாம் என கடிதம் எழுதி ஏமாற்ற வேண்டாம் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விமரிசித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்...

Do not cheat by writing the letter; Stalin, the DMK leader who attacked Minister Vijayabaskar!

"நீட் எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! அதை விடுத்து கடிதம் எழுதி இருக்கிறாராம் விஜயபாஸ்கர். சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். நீட் தேர்வை நடப்பாண்டு கைவிடக் கோரி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். கொரோனா தொற்றால் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனச்சுமையோடு தான் இருக்கிறார்கள்.பள்ளி தேர்வு முடிவுகள் முதல் கல்லூரி செமஸ்டர் தேர்வு வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு என்பது இந்தாண்டு நடத்தாமல் இருப்பதே நல்லது என்று கருதுகிறார்கள் மாணவர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios