Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் பி டீமா சசிகலா..? அதிமுக வாக்குகளை அள்ள வளைந்து கொடுக்கிறாரா மு.க.ஸ்டாலின்..?

திட்டங்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்து வந்த ஸ்டாலின் தற்போது கட்சியை நடத்த முடியாது என்று கூறியது அரசியல் வட்டத்தில் வேறு விதமாக பார்க்கப்படுகிறது. 
 

DMKs B Deema Sasikala ..? Is MK Stalin giving in to AIADMK votes?
Author
Tamil Nadu, First Published Feb 11, 2021, 1:08 PM IST

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ள நிலையில், அவருடைய வருகை குறித்து தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அவர் தி.மு.கவின் பி டீம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மேலும், ஒன்றினைவோம் வா என்று சசிகலா தி.மு.கவையே அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 DMKs B Deema Sasikala ..? Is MK Stalin giving in to AIADMK votes?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களுரூவிலிருந்து இன்று தமிழகம் திரும்பினார். சசிகலாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பார்க்கப்பட்டது. சசிகலா முதலாவதாக 7ம் தேதி வருவார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலாவின் வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர் இரண்டு முறை தனது வாகனத்தை மாற்றி பயணித்தார்.

இந்நிலையில் சசிகலாவின் வருகையை ஊடகங்கள் ஒளிபரப்பின. ஆனால் தி.மு.கவின் சேனலான சன் டி.வி காலை முதல் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது. வாணியம்பாடி அருகே சசிகலா கொடுத்த பேட்டியையும் ஒளிபரப்பியது. சசிகலாவின் வருகை ஆளும் தரப்பிற்கு எதிராக அமையும் என்ற நோக்கத்தில், சன் டி.வி இந்த செய்தியை தொடந்து ஒளிபரப்பி வந்ததாக கருதினாலும், டி.டி.வி தரப்பிலிருந்து சன் டி.வியிடம் சசிகலாவின் வருகையை தொடர் நேரலை ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DMKs B Deema Sasikala ..? Is MK Stalin giving in to AIADMK votes?

சிவகங்கையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “முதலமைச்சர் எடப்பாடியை நம்பி அ.தி.மு.கவால் இனி பயணம் செய்ய முடியாது. அவரை நம்பி ஆட்சி நடத்த முடியாது, கட்சியும் நடத்த முடியாது” என்று தெரிவித்தார். அதற்கு முந்தைய கூட்டத்தில் கூட “பெங்களூருவிலிருந்து ஒருவர் வருகிறார், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை’ என்று கூறினார். திட்டங்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்து வந்த ஸ்டாலின் தற்போது கட்சியை நடத்த முடியாது என்று கூறியது அரசியல் வட்டத்தில் வேறு விதமாக பார்க்கப்படுகிறது.

 DMKs B Deema Sasikala ..? Is MK Stalin giving in to AIADMK votes?

தேர்தலுக்கு பின் சசிகலா அ.தி.மு.கவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தி.மு.கவுடன் ரகசியம் பேரம் பேசியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இது குறித்து டி.டி.வி.தினகரன் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளாதகவும் கூறுகிறார்கள். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஒன்றினைவோம் வா என்று தி.மு.கவையே சசிகலாவும் டி.டி.வி தினரனும் அழைத்து வருவதாக தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios