Kuchanur municipality election result 2022 : முன்னாள் துணை முதலமைச்சரின் கோட்டை என கருதப்படும் தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் திமுக முன்னிலை பெற்று வரும் நிலையில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதில் ஒரு இடத்தில் கூட அதிமுக முன்னிலையில் இல்லை, அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் என ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அது தற்போது நிரூபணமாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.

இதில்....

திமுக - 316..
காங்கிரஸ் - 21
மதிமுக -5 
சிபிஎம் -5 
விசிக - 3 
சிபிஐ - 3 
ஐயூஎம்எல் -1 

அதிமுக - 46 
 பிற -18
பாஜக -7
பாமக -3
அமமுக - 2
 கைப்பற்றியுள்ளனர்....

இதற்கிடையே தென்னகத்தில் தங்கள் ஆட்சி தான் என மார்தட்டி வந்த அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது...இந்நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வதின் சொந்த தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி திமுகவிடம் பறிபோகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அதிமுகவினரிடையே ஏர்[ஏற்பட்டுள்ளது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் -யின் கோட்டை என கருதப்படும் தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 12 வார்டுகளிலும் திமுக வென்றுள்ளது...