இந்தியா பல்வேறு மொழிகள் மதங்களை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வரும் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது.
கிறிஸ்துவர்கள் செய்த ஜெபத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது என அமைச்சர் நாசர் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் உள்ள அற்புத ஜெபகோபுரம் ஏஜி தேவாலயத்தின் 40ம் ஆண்டின் ஆரம்ப விழா நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’’கிறிஸ்துவர்களின் ஜெபத்தினால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகள் இதுவரையில் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. சிறுபான்மையின மக்களை பாதிக்காதவாறே ஆட்சி நடத்தி வந்தனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக சிறுபான்மையினர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். அதன் விளைவு மத்தியில் விரைவில் ஆட்சி முடிவுக்கு வரும். இந்த ஜெப கூட்டத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்கள் என மூன்று மதத்தினரும் உள்ளனர். இதுதான் மத நல்லிணக்கம் மத ஒற்றுமை.
இந்தியா பல்வேறு மொழிகள் மதங்களை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வரும் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. கிறிஸ்துவர்களின் ஜெபத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது’’எனக் கூறினார்.
முன்னதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கைதாகி சிறையில் இருக்கிறார். அவர் அப்படி பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இப்போது திமுகவை சேர்ந்த அமைச்சரே ‘’கிறிஸ்தவர்களின் ஜெபத்தினால் தான் திமுக ஜெயித்துள்ளது’ எனப் பேசியுள்ளது திமுகவினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படியானால் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சொன்னது உண்மைதானா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
