மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளை, கர்நாடகா அரசு கட்டியதில் ஆட்சேபனை இல்லை' என என கடந்த 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி  சட்டசபையில், கருணாநிதி  தெரிவித்தார்.

இதை விட, தமிழகத்திற்கு  கருணாநிதி  செய்த பாவச்செயல் உண்டா ? என கேள்வி எழுப்பினார்.. கருணாநிதி சென்னைக்கு செய்த புண்ணியம், ஏரியை அழித்து, வள்ளுவர் கோட்டம் கட்டியது என்றும் அவர் கிண்டல் செய்தார்.

தமிழகத்தில் .தி.க., - தி.மு.க., இருக்கும் வரை, நல்லதே  எதுவும் நடக்காது என்று கூறிய எச்.ராஜா, அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் திமுக  பொருளாளர் துரைமுருகன் தான்.. ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு தண்ணீர் எடுத்து சென்றால், போராட்டம் வெடிக்கும்' என்கிறார். உள்ளூரில் உள்ள சக தமிழருக்கே, தண்ணீர் தர மறுத்தால், வேறு எங்கிருந்து பெற முடியும்? ஆகவே தமிழகத்தில் இருந்து திமுகவை துரத்தி அடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர், பதவி வெறிக்காக கட்சி மாறியவர். அவர் போகாத  கட்சியே இல்லை என்றும் எச்.ராஜா கூறினார்.