Asianet News TamilAsianet News Tamil

திமுக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த லட்சணம் எங்களுக்கு தெரியாதா..? போட்டுடைத்த டி.டி.வி. தினகரன்..!

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கிறார்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

DMK vote loss...TTVDinakaran
Author
Tamil Nadu, First Published Apr 13, 2019, 5:56 PM IST

கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என  டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடலூர் உழவர் சந்தையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு கடுமையாதக எதிர்ப்பு தெரிவித்த பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். DMK vote loss...TTVDinakaran

மதச்சார்பற்ற கூட்டணி எனக்கூறும் தி.மு.க. இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தி.மு.க.வை. கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோவிலுக்கு செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் மேடை தோறும் கூறி வருகிறார். எந்த மதத்தினரும் யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால் தாங்கள்தான் இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல பாஜகவினர் கூறிக்கொள்கின்றனர். மேலும் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறிவருகின்றனர்.DMK vote loss...TTVDinakaran

முந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கிறார்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios