Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சரை அதிர வைத்த திமுக தொண்டர்கள்… அஞ்சலி செலுத்த வரும்போது மெரீனா வேண்டும் என முழக்கமிட்டு ஆவேசம்…

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினர். 

DMK volunteers stunned chief minister asking marina for karunanidhi

மறைந்த  திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.

தொடர்புடைய படம்

இதையடுத்து உடனடியாக இது குறித்து உயர்நீதிமன்றத்துக்கு திமுக கொண்டு சென்றது. நேற்றிரவு 12 மணி வரை இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இது குறித்து இன்று காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

DMK volunteers stunned chief minister asking marina for karunanidhi

இந்நிலையில் மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், தங்கமணி வேலுமணி, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், தமிழக சட்டப் பேரவை சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

karunanidhi body in rajaji க்கான பட முடிவு

பின்னர் அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்லும்போது, திமுக தொண்டர்கள்  வேண்டும்.. வேண்டும் என மெரினா வேண்டும் என முழக்கமிட்டு முதலமைச்சரை அதிர வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios