ஏழைப்பெண்கள் நான்கு பேரை தாக்கிய விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை, மாவட்டம் திருமயம், பைரவர் கோவில் முன் பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் கவுரி. திமுக ஒன்றிய செயலாளர் சரவணனின் சகோதரர் பைரவர் கோயிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதை குத்தகைக்கு எடுத்துள்ளார். அப்பகுதியில் தேங்காய் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார்.

அதே பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக தேங்காய் பழம் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் வாசுகி. தொழில் போட்டியால் வாசுகி நடத்தி வந்த கடையை காலி செய்யுமாறு கேட்டி சிவராமன் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு மறுத்த வாசுகையை அங்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் வாசுகி, கவுரி உட்பட நான்கு பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. தாக்கப்பட்ட அந்த 4 பெண்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்,

இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. ஒரு கட்சியில் இருக்கிறோம். இப்படி அராஜாகமாக நடந்துகொள்வது கெட்ட பெயரை ஏற்படுத்தும். நமது கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கும் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்துமே என்கிற பயமே இல்லாமல், அராஜகத்தில் ஈடுபடுகிறோமே என்கிற எண்ணம் இப்படி தாக்குதலில் ஈடுபடுவோருக்கு இல்லை. இதெற்கெல்லாம் காரணம் கட்சித் தலைமை சம்பந்தப்பட்டவரை தட்டிக் கேட்பதே இல்லை. 

இதற்கு முன் நடந்த சில சம்பவங்களுக்கு பிறகும் திமுக ரவுடிகள் தங்களது அராஜாக போக்கை மாற்றிக் கொள்ளாததற்கு திமுக தலைமை நடவடிக்கை எடுக்காததே காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இந்தத் தாக்குதல் சம்பவம் திமுக தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில்  திருமயம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.