Hosur Corporation Election: கெத்து காட்டிய சுயேச்சைகள்.. வளைத்து போட்டு ஓசூர் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நடந்த முதல் தேர்தல் என்பதால், அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எந்தகட்சி அதிக வார்டுகளில் வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் 23 இடங்களை கைப்பற்றும் கட்சியை சேர்ந்தவர் மேயராக தேர்வு செய்யப்படுவார். இதனால், அதிமுக, திமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 4 சுயேச்சைகள் மற்றும் ஒரு பாமக வேட்பாளர் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து, ஓசூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நடந்த முதல் தேர்தல் என்பதால், அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எந்தகட்சி அதிக வார்டுகளில் வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் 23 இடங்களை கைப்பற்றும் கட்சியை சேர்ந்தவர் மேயராக தேர்வு செய்யப்படுவார். இதனால், அதிமுக, திமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், தனி பெரும்பான்மைக்கு தேவையான 23 வார்டுகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. மொத்தமுள்ள, 45 வார்டுகளில் திமுக 21, அதிமுக 16, காங்கிரஸ் மற்றும் பாமக, பாஜக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன. திமுகவில் சீட் வழங்கப்படாததால் சுயேச்சையாக களம் இறங்கிய 24வது வார்டு வேட்பாளர் மஞ்சம்மா, 35வது வார்டு வேட்பாளர் தேவி, மற்றும் 43வது வார்டு வேட்பாளர் கவுசர்பானு, 36வது வார்டில் திமுக கூட்டணியான காங்கிரசில் சீட் வழங்காததால் சுயேச்சையாக போட்டியிட்ட பாக்கியலட்சுமி உட்பட 5 சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேச்சைகள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உதவியுடன் மேயர் பதவியை கைப்பற்ற திமுக முடிவு செய்தது.
இந்நிலையில், ஒரு பாமக வேட்பாளர் மற்றும் 4 சுயேச்சைகளும் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து, திமுக கூட்டணியின் பலம் 27ஆக உயர்ந்ததையடுத்து ஓசூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.