திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளராக எ.வ. வேலு அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்து வருகிறது. 

எ.வ.வேலுவின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவின் முக்கிய புள்ளியான எ.வ.வேலு மூலமாக திருவண்ணாமலை முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்படலாம் என புகார் எழுந்ததால் இந்த சோதனை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.