திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற்று மீண்டு வர  வேண்டும் என தொண்டர் ஒருவர் தன் கைகளில் ப்ளேடால் "DMK KALAIGNAR " ( டிஎம்கே கலைஞர்) என எழுதியும், ரத்தம் சொட்ட  சொட்ட தன்னுடைய முழு விசுவாசத்தை காண்பித்து உள்ளார்

திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என தகவல்  வெளியானதும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

நேற்று மாலை முதல் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை  முன்பு குவிந்து வந்தனர். கலைஞரின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டு பின்பு அதனை சரி செய்யப்பட்டு தற்போது  சீராக உள்ளது என நேற்று காவேரி மருத்துவமனை தெரிவித்து  இருந்தது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை முன்பு கூடிய தொண்டர்கள்,  மொட்டை அடித்தும், பிரார்த்தனை செய்தும், அன்னதானம் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும், தங்களது ஆதரவை  தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தீவிர திமுக விசுவாசியான தொண்டர் ஒருவர்,  திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற்று மீண்டும் வர  வேண்டும் என தொண்டர் ஒருவர் தன் கைகளில் ப்ளேடால் "DMK KALAIGNAR " ( டிஎம்கே கலைஞர் ) என எழுதியும், ரத்தம் சொட்ட  சொட்ட தன்னுடைய முழு விசுவாசத்தை காண்பித்து உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.