Asianet News TamilAsianet News Tamil

கூட்டணி கட்சிகளுக்கு அல்வா... 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் திமுக..? ப்ளான் போட்டுக்கொடுத்த பி.கே..!

அ.தி.மு.க.வில் இருப்பது போல் 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்தால் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் ஆலோசனைகளை தெரிவித்து இருக்கிறார்கள். 

DMK stands alone in 234 constituencies? Planned PK
Author
Tamil Nadu, First Published Feb 25, 2020, 4:10 PM IST

சட்டசபை பொதுத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை கேட்டு திமுக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

தேர்தல் களத்தில் தி.மு.க. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிகளின் துணையுடனேயே தேர்தலை சந்திக்க தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.DMK stands alone in 234 constituencies? Planned PK

சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக பிரபல அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை கேட்டும் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை பிரசாந்த் கிஷோரே வகுத்து கொடுத்து வருகிறார். இதற்காக பிரசாந்த் கிஷோரின் குழுவினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே சென்னை வந்து தமிழக அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்துள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக சென்றும் கள நிலவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் யார்- யாரின் செயல்பாடு நன்றாக உள்ளது? தொகுதி மக்களை தினமும் அணுகும் எம்.எல். ஏ.க்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் தயாரித்து வருகிறார்கள். யார் மீதாவது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.DMK stands alone in 234 constituencies? Planned PK

தி.மு.க. இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாவட்டத்தில் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கட்சியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் உள்ள மாவட்ட செயலாளர்களை தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து அவர்களது அனுபவத்தை கட்சி பணிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் கூறியுள்ளனர்.DMK stands alone in 234 constituencies? Planned PK

அ.தி.மு.க.வில் இருப்பது போல் 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்தால் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் ஆலோசனைகளை தெரிவித்து இருக்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் திமுகவின் கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு 234 லிலும் திமுகவே போட்டியிட அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios