தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள எம்பிக்கள் காதறுந்த ஊசிகள் என தமிழக பிஜேபி தலைவர் 
தமிழிசை திமுகவை கேவலமாக திட்டி ட்வீட் போட்டுள்ளார்.  இதற்கு திமுக தொழில்நுட்ப பிரிவு மற்றும் நெட்டிசன்கள் கோபத்தையும் நாகரீகமான வார்த்தைகளால் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.   தென்னிந்தியாவை பொறுத்தவரை, திமுக கூட்டணியே மாஸ் காட்டியது. அதிமுக பிஜேபி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக தேனி தொகுதியில் வென்றது ஆனால், பிஜேபி, பாமக, தேமுதிக என மூன்று கட்சிகளும் மொத்தமாக வாஷ் அவுட் ஆனது. அதிலும் பிஜேபி வேட்பாளர்களான தமிழிசை, சிபி.ராதா கிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களே படு தோல்வி அடைந்தது பிஜேபியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எப்படியும் ஜெயிச்சு மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில் இருந்த தமிழக பிஜேபியின் கனவில் மண்ணை வாரி போட்டது தேர்தல் முடிவு. இதைத்தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என   எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இடமளிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இடம் கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் வெற்றிபெற்ற எம்பிக்கள் குறித்து நாளிதழ் ஒன்றில் பவர்ஃபுல் பார்லிமென்டேரியன்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.  நிலையில், அதை போட்டோ ஷாட் எடுத்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை "காதறுந்த ஊசிகள்?தைக்கப்பயன்படுமா?குத்திப்பார்க்கலாம்?அவ்வளவுதான்?இதுதான் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களின் நிலைமை.?குரல் கொடுக்கலாம்?வெளிநடப்பு செய்யலாம்?கோரிக்கை மனு கொடுத்து படம் காட்டலாம்?அவ்வளவே ஆணையிடும் அதிகாரம் யாரிடம்? இருந்தாலும் தமிழகத்தின் தேவைகளை பாஜக நிறைவேற்றும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரான டாக்டர் தமிழிசை, இப்படியா கேவலமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விமர்சித்து ட்வீட் போடுவது? இதுதான் நாகரீகமா? என தமிழிசை டிவீட்க்கு திமுகவினர் ரிப்லை செய்து வருகின்றனர்.

இதோ...