Asianet News TamilAsianet News Tamil

செந்தில்பாலாஜி திடீர் உள்ளிருப்பு போராட்டம்...! திரண்ட தொண்டர்கள்... குவிந்த போலீஸ்...!

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அங்கு திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

DMK Senthil balaji protest
Author
Tamil Nadu, First Published Apr 14, 2019, 4:41 PM IST

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அங்கு திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். DMK Senthil balaji protest

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலைளில் கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணியும், அதிமுக சார்பில் தம்பிதுரையும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில்பாலாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிப்புக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். DMK Senthil balaji protest

இந்நிலையில், 16-ம் தேதி நடைபெறும் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நேரம், இடம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜோதிமணி மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். DMK Senthil balaji protest

முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலின் போது காவலர்களுடன் செந்தில்பாலாஜி தகராறில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு  செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க செந்தில்பாலாஜி முன்ஜாமீன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios