Asianet News TamilAsianet News Tamil

20 லட்சம் கோடி திட்டம் ஏழைகளுக்கானது அல்ல..இந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது..டி.ஆர்.பாலு கணிப்பு!

நாட்டில் உள்ள சில பணக்காரர்களுக்கு உதவி செய்யயும் ஆட்சியாக மத்திய அரசு உள்ளது. 20 லட்சம் கோடி ரூபாய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத்திட்டங்கள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போலவே உள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க முடியும்? 

DMK senior leader T.R.Baalu criticizes 20 lakh cr scheme
Author
Chennai, First Published May 18, 2020, 9:47 PM IST

நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க முடியும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.DMK senior leader T.R.Baalu criticizes 20 lakh cr scheme
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர்  நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யு, திமுக மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்திலிருந்தும், அந்த நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை காப்பதற்காக திமுக தலைவர் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் செய்து வருகிறார்.DMK senior leader T.R.Baalu criticizes 20 lakh cr scheme
ஆனால், ஆளுங்கட்சியோ ஆயிரம் ரூபாயை மட்டும் ஏழை மக்களுக்கு வழங்கியது. இந்தக் காலத்தில் இந்தத் தொகை மக்களுக்கு போதுமானதா என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த ஊரங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களை பற்றி சிந்திக்கவேயில்லை. குறைந்தபட்சம் பொதுமக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ரூ.7,500 வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

DMK senior leader T.R.Baalu criticizes 20 lakh cr scheme

  நாட்டில் உள்ள சில பணக்காரர்களுக்கு உதவி செய்யயும் ஆட்சியாக மத்திய அரசு உள்ளது. 20 லட்சம் கோடி ரூபாய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத்திட்டங்கள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போலவே உள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க முடியும்? எம்.பி.களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் இந்த அறிவிப்பை செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால்தான் இவை எல்லாம் சாத்தியமாகும். மத்திய அரசு அறிவித்தது ஏழைகளுக்கான அறிவிப்புகளே அல்ல” என டி.ஆர்.பாலு பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios