திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை  மொத்தத்தில் காங்கிரஸுக்கு ஓட்டே இல்லை என திமுக பொருளாளரும் எதிர்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் அதிரடியாக தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் எனவும் காட்டமாக கூறியுள்ளார் அவர்.  அவரின் பேச்சி   திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது  என்பதையே தெளிவாக காட்டுகிறது .  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மீறி விட்டது .  காங்கிரஸ் கட்சிக்கு புதிய பதவிகளை வழங்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர் . 

 

இது திமுகவை கடுமையாக எரிச்சலடைய வைத்துள்ளது.  இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தையும்  திமுக புறக்கணித்தது ,  இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்து கொண்டார் ,  அதில் பேசிய அவர்,  திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் அதினால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை ,  அது எங்கள் ஓட்டு வங்கியை பாதிக்காது ,  மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே இல்லை அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும் காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர் பாலு கூறினார். 

ஆனால் , நான் பதிலையே கூறிவிட்டேன் என்றார் .  துரைமுருகனின் இந்த அதிரடி பேச்சு காங்கிரஸ் திமுக கூட்டணியில் பிளவை உண்டாகி விட்டது என்பதை  உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் நான் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன் . எனவே எனது கருத்தால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது காலம் எப்போதும் நல்ல பதிலைத்தான் சொல்லும் என்று கூறியுள்ளார் . ஆனால் துரைமுருகனின் கருத்து திமுகவின் உண்மையான நிலைப்பாட்டை வெளிபடுத்தியுள்ளது  என திமுக தொண்டர்கள் பேசிவருகின்றனர்.