பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலையை தி.க.விடம் வைச்சுக்கோங்க... எங்ககிட்ட எடுபடாது... ரஜினிகாந்துக்கு திமுக பகிரங்க எச்சரிக்கை..!
திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை செய்ய வேண்டாம் என திமுக நாளேடான முரசொலி தலையங்கம் பகுதியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை செய்ய வேண்டாம் என திமுக நாளேடான முரசொலி தலையங்கம் பகுதியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முரசொலியில் வந்த தலையங்கத்தில், ‘’தந்தை பெரியார் தலை மீண்டும் உருள்கிறது. அவர்தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேசுபொருள். ஆதரவாளர்களுக்கும் அவரது எதிர்ப்பாளர்களுக்கும். அவரை விமர்சனங்களை தான் விரும்பினார் வரவேற்றார். ஆனால் இன்றைக்கு அவர் மீதி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் விமர்சனங்களாக இல்லாமல் இரண்டு வாரங்களாக பொய்களாக பெரும்பாலும் இருக்கின்றன என்பதால் தான் இன்றைய தமிழக பொதுவெளி சர்ச்சையாகிவிட்டது.
துக்ளக் விழாவில் அதன் நிறுவன ஆசிரியர் சோவை பெருமை படுத்துவதாக நினைத்து ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியாரை சிறுமைப்படுத்தி பேசினார். அது ரஜினியின் விமர்சனமாக கூட இல்லை வரலாற்று பிழைகள் கொண்டதாக இருந்தது உண்மை வரலாறு அறியாத பேச்சு. பொதுவெளியில் விமர்சனங்கள் அவர் மீது பாய்கின்றன. இதுபற்றி திமுக தலைவரிடம் கேட்டபோது அவர் நறுக்கு தெறித்த படி சொன்னார் ’’94 வயது வரை தமிழ் சமுதாயத்துக்காகவே வாழ்ந்து போராடி, இந்த தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்த பெரியார் அவர்களைப் பற்றி பேசும்போது சற்று யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என்பதுதான் நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் அன்பான வேண்டுகோள்’’என்று கூறியிருந்தார்.
யோசித்து சிந்தித்து பேசி இருக்க வேண்டும் ரஜினி. ஏனென்றால் அவர் பயன்படுத்திய ஒவ்வொரு கருத்தும் தவறு என்று திராவிடர் கழகம் சார்பில் மறுக்கப்பட்டுள்ளது. ராமர், சீதை படங்கள் நிர்வாணமாக எடுத்து வரப்படவில்லை. அதற்கு செருப்பு மாலை போடப்படவில்லை என்று விவரிக்கிறது திராவிடர் கழகம். இப்படி எடுத்து வந்ததாக படம் வெளியிட்டது என்றால் அந்த இதழை காட்டுங்கள் என்கிறது திராவிடர் கழகம். அதனை காட்டாமல் அவர்களுக்கு தலை காட்டுகிறார் ரஜினிகாந்த்.
பெரியாரின் பிராமணர் எதிர்ப்பு 1929-ல் தொடங்கி விட்டது அதனை அவர் மறுக்கவில்லை. ஆனால் இன்று அதை மீண்டும் பூதாகரமாக்கி திமுகவை குறிவைத்து தாக்க தொடங்கி இருப்பது தான் இவர்களது உண்மையான நோக்கம். ராமரை காப்பாற்றுவதா? திமுகவை எதிர்ப்பதா? என்று கேட்க வேண்டியுள்ளது. 1971இல் திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலத்தை அன்றைய முதல்வர் கலைஞரை முடிந்து நடத்தியதைப் போல காட்டி அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த துடித்தது.
தெற்கில் அரசியல் தந்திரம் கலைஞரை நேரடியாக வீழ்த்த முடியாமல் மறைமுகமாக வீழ்த்தவே அன்றைய தினத்தை பயன்படுத்தினார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 1967 -ல் நடந்த தேர்தலில் 138 இடங்களை பெற்ற திமுக 1971 தேர்தலில் 184 இடங்களைப் பெற்றது. இரண்டையும் பிரித்தறிய தமிழக மக்களுக்கு தெரியும். காங்கிரசை ஆதரித்த போதும் ராமாயணம் எதிர்த்தார் பெரியார். இருந்தபோதும் ராமாயணம் எதிர்த்தார் பெரியார். திமுகவை எதிர்த்து போரிடும் போதும் ராமாயணம். பெரியார் ஆதரித்த போதும் ராமாயணம் எதிர்த்தார். எனவே பெரியாரையும் அவரது தமிழக காங்கிரஸின் புகழ்ந்து திமுகவையும் புரிந்து வைத்திருந்தது தமிழகம்.
அதனால் தான் பெரியாரை காட்டி திமுகவை வீழ்த்த நினைத்த அநாகரிக அரசியல் 1971ல் தோற்றது. தோற்றுக் கொண்டே வருகிறது. அன்றைய பெரியார் எதிர்ப்பின் பின்னணியில் திமுகவும் இருந்தது போலவே இன்று பல ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. முதல்வர் கலைஞர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பழைய செய்திகள் பிளாக் எடுத்து இருட்டு அரசியல் செய்கிறார்கள். திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலங்களில் இதுபோன்ற மனம் புண்படும் வாசகங்கள் படங்கள் இருந்தால் அதனை நீக்க தீவிரமாக அன்றைய தமிழக அரசு உத்தரவிட்ட பதிவுகளை இந்த ஊடகங்கள் தேடிப் பார்க்கவேண்டும்.
காவல்துறையினர் இதுபோன்ற படங்களை எடுத்து வரக்கூடாது என்று நிறுத்தி விடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இப்படி கேட்டுக்கொள்வதும், தடை செய்வதும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன் என்று பெரியாரை அறிக்கை விடும் அளவுக்கு திமுக அரசு அன்று நடந்துகொண்டது. 1971 மே 16ல் திருவாரூரில் நடக்க இருந்த ஊர்வலத்துக்கு முன் பெரியாரை வந்து சந்தித்த அன்றைய மாவட்ட ஆட்சியர் டி.வி.அந்தோணி ஐ.ஏ.எஸ் ராமர் சீதை உருவங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றால் இதை எழுத்து மூலமாக கேட்டார். பெரியாரும் எழுத்து மூலமாக கொடுத்தார். ஆட்சியர் அவர்கள் கடமையாற்ற நாம் நம் செயல்களை செய்வோம் என்று பெரியார் அறிவித்தார். ஒரு அரசின் கடமையிலிருந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழுவவில்லை. பெரியார் அவர் கொள்கைகளை விட்டுத் தரவில்லை.
இந்த அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர்கள் திமுக விமர்சிப்பது விஷமத்தனமானது. திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை செய்ய வேண்டாம்’’ என விமர்சனம் செய்துள்ளது.