சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களை பிரதான கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் திமுக தங்களது பிரச்சாரங்களை கையாளும் பாணியே வேறு விதமாக உள்ளது. மக்களிடம் வாக்கு சேகரிக்கும் முறை ஆக்ரோஷமாகவும், மிரட்டும் வகையிலும் இருக்கிறது என பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களை பிரதான கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் திமுக தங்களது பிரச்சாரங்களை கையாளும் பாணியே வேறு விதமாக உள்ளது. மக்களிடம் வாக்கு சேகரிக்கும் முறை ஆக்ரோஷமாகவும், மிரட்டும் வகையிலும் இருக்கிறது என பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி செந்தில் பாலாஜி, மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது “திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு செல்லலாம், எந்தவொரு அதிகாரியும் தடுக்க மாட்டாங்க, அப்படி தடுத்தால் எனக்கு போன் பண்ணுங்க அடுத்த நிமிடம் அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டாங்க” என்று அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் வகையில் பேசியது மிகவும் சர்ச்சைக்குள் ஆனது. தமிழக மக்கள் தி.மு.கவிற்கு ஆளும் அதிகாரத்தை இன்னும் தரவே இல்லை அதற்குள்ளாகவே, தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்துவிட்ட தோரணையுடன் உலா வருவதாக மக்கள் கருதுகின்றனர்.

ஆட்சிக்கு வராமலேயே அதிகாரிகளை இப்படி ஒருமையில் பேசுவது மிகவும் கண்டனத்துக்கு கூறியது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள ஒருவர் பொதுவெளி கூட்டத்தில் அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியது ரவுடி அரசியலையும், 10 வருட காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியை வெளிப்படுத்துகிறது.
திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி அக்கரைப்பேட்டையில் மீனவர்களை சந்தித்து விட்டு திரும்பும் போது காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் உதயநிதியை தடுத்து நிறுத்தினார். மீனவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டது தவறு என கூறி அனுப்பியதால், தன்னை தடுத்து நிறுத்தியதற்காக “அந்த காவல் அதிகாரி பெயரை குறித்து வைத்துகொன்டேன், ஆட்சிக்கு வந்தவுடன் அவரை பார்த்துக்கொள்கிறேன்” என்று காவல் துறையின் மூத்த அதிகாரியை எச்சரிக்கும் வகையில் பேசினார்.

திமுக ரவுடிசத்திற்கு பேர்போன ஒன்று என்பதை எல்லோரும் அறிந்தது, ஆனால் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசுவது திமுகவின் அடாவடி அரசியலை காட்டுகிறது.
கழக தலைவரே ஒரு மேடையில் தான் ஒரு மிகப்பெரிய என்றும், அதன் பிறகு தான் இந்த அரசியல் எல்லாம் என்று கூறினார். சமீபத்தில் கூட திமுக உறுப்பினர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் இலவசமாக பிரியாணி கேட்டிருக்கிறார், ஹோட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்ததால், திமுகவினர் கும்பலாக சேர்ந்து அந்த கடை உரிமையாளரை சராமரியாக தாக்கிவிட்டு ஓடி விட்டனர். திமுக தலைமை முதல் நேற்று இணைந்த உறுப்பினர்கள் வரை அதே ரவுடி குணம் உள்ளவர்கள் என்பது சரி தான். தலைமை சரி இல்லையென்றால் கடைசி தொண்டன் கூட சரியாக இருக்க மாட்டான் என்ற கூற்று இங்கு உண்மையாகிவிட்டது.
திமுக ரவுடி கட்சி என்று மாற்று கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் திமுகவினரின் பிரச்சாரமும் அவர்களது பேச்சும் அமைந்துள்ளது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் திமுகவா? என்று மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
