திமுக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  

தீர்மானங்கள் விவரம்;

* மும்மொழித் திட்டம் என்று தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள். இருமொழிக் கொள்கைக்கு விளைவிக்கும் எந்த ஒரு முடிவுகளையும் திமுக கடுமையாக எதிர்க்கும்.  

* திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும் தொகுதியிலும் சிறப்பாக செயலாற்றி மக்களிடம் நற்பெயர் பெற வேண்டும். மேலும் கருணாநிதியின் பிரதியாக செயல்பட வேண்டும்.

* நாடாளுமன்றத்தில் திமுக மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நிற்பதை மாவட்ட செயலாளர் கூட்டம் பெருமிதம் கொள்கிறது. 

* அனைத்து தரப்பு வாக்காளர்களின் குறைகளுக்கும் உடனுக்குடன் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தீர்வு காண வேண்டும். 

* தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

* ஹைட்ரோ கார்பன் திட்டங்களை காவேரி டெல்டா மாவட்டங்களில் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.