திமுக சார்பில் தேர்தல் பணிக்காகவும் அக்கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் திருப்பூர் மாவட்டத்தை நான்காகப் பிரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருப்பூர் வடக்கு - திருப்பூர் தெற்கு மாவட்டத்தை, கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருப்பூர் மாநகர் - திருப்பூர் வடக்கு - திருப்பூர் கிழக்கு - திருப்பூர் தெற்கு என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

திருப்பூர் மாநகர் மாவட்டம்

114. திருப்பூர் தெற்கு
113. திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு மாவட்டம்

112. அவிநாசி (தனி)
115. பல்லடம்

திருப்பூர் கிழக்கு மாவட்டம்

102. காங்கேயம்
101. தாராபுரம் (தனி)

திருப்பூர் தெற்கு மாவட்டம்

125. உடுமலைப்பேட்டை
126. மடத்துக்குளம்

திருப்பூர் மாநகர் - திருப்பூர் வடக்கு - திருப்பூர் கிழக்கு - திருப்பூர் தெற்கு ஆகிய மாவட்டப் பொறுப்பாளர் நியமனம் : தலைமைக் கழக அறிவிப்பு

கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனேநடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற திருப்பூர் மாநகர் - திருப்பூர்-வடக்கு, திருப்பூர்-கிழக்கு, திருப்பூர்-தெற்கு மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

1.திருப்பூர் மாநகர் மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. க. செல்வராஜ்

2. திருப்பூர் வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. இல. பத்மநாபன்

3. திருப்பூர் கிழக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. மு.பெ.சாமிநாதன்

4. திருப்பூர் தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ., ஆகியோர் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.