தி.மு.க.காரனை கவனிச்சுட்டா போதுமா..? எங்களுக்கு கொடுக்கலேன்னா ஒரு ஓட்டும் கிடைக்காது பாஸ்... கூட்டணி களேபரம்..!

தி.மு.க.வில் எம்.பி. சீட் வாங்கிய வாரிசுகளிலேயே மிக மூர்க்கமான திட்டுக்கு உள்ளானவர் கவுதம சிகாமணிதான். மாஜி அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பொன்முடியின் மகன் தான் இவர். தன் மகனுக்காக கிட்டத்தட்ட ஸ்டாலினிடம் சண்டை போட்டும், சில நாட்களாக அறிவாலயம் வராமல் இருந்தும், கழக வி.வி.ஐ.பி.க்களின் போன் அழைப்பை ஏற்காமல் இருந்தும் அடம் பிடித்து சீட் வாங்கிக் கொடுத்தார் பொன்முடி.

DMK ponmudi Shock

தி.மு.க.வில் எம்.பி. சீட் வாங்கிய வாரிசுகளிலேயே மிக மூர்க்கமான திட்டுக்கு உள்ளானவர் கவுதம சிகாமணிதான். மாஜி அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பொன்முடியின் மகன் தான் இவர். தன் மகனுக்காக கிட்டத்தட்ட ஸ்டாலினிடம் சண்டை போட்டும், சில நாட்களாக அறிவாலயம் வராமல் இருந்தும், கழக வி.வி.ஐ.பி.க்களின் போன் அழைப்பை ஏற்காமல் இருந்தும் அடம் பிடித்து சீட் வாங்கிக் கொடுத்தார் பொன்முடி. 

பலர் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கிக் கொடுத்திருக்க, பொன்முடியை மட்டும் ஓவராக திட்ட காரணம்....’சொந்தக் கட்சியினரை மதிக்க மாட்டார், பணம் செலவழிக்க மாட்டார், அணுசரனையாய் செல்ல மாட்டார்.’ என்பதுதான். ஸ்டாலினும் ஒருவழியாக சீட் கொடுத்துவிட்டு மேற்படு புகார்களை சுட்டிக்காட்டி, ‘இதையெல்லாம் மாத்திக்குங்க. இல்லேன்னா உங்க மகனோட தோல்வி மட்டுமல்ல, கட்சியின் சறுக்கலுக்கும் காரணமாவீங்க.’ என்றார் கண்டிப்பாக. ஓ.கே தளபதி! என்று தலையாட்டிவிட்டு கள்ளக்குறிச்சி தொகுதி நோக்கி கிளம்பி வந்தனர் அப்பாவும், மகனும்.

 DMK ponmudi Shock

 தற்போது கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் பகுதிகளில் வரக்கூடிய அந்த தொகுதி சார்ந்த சட்டமன்ற தி.மு.க.வினரை அழைத்து ஆத்தூரில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார் பொன்முடி. கூட்டத்தில் ‘எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க. நான் கண்டிப்பானவன், ஆனா கறார் பேர்வழியில்லை, கஞ்சப் பேர்வழியுமில்லை. உற்சாகமா வேலையை பாருங்க, உங்களுக்கு ‘எல்லாமே அதிகளவுல தேடி வரும்.’ ’ என்று சிலேடையாக சொல்லி அமர்ந்தாராம்.DMK ponmudi Shock

இதைக் கேட்டு தி.மு.க.வினர் குஷியோ குஷி. காரணம்,  வொயிட் பெட்ரோல் போட்டால்தானே ஏரோப்ளேன் பறக்கும்? அதான் அதேதான். அதுமட்டுமில்லை, எப்பவுமே அதிகார தோரணையில், என்னமோ ஸ்டாலினுக்கே அரசியல் சொல்லித் தந்தது நான் தான்! என்பது போல் ஓவர் கெத்தாகவே பார்த்து வெறுத்த பொன்முடி, இப்படி திடீரென பம்மு பம்மென்று பம்மியதைப் பார்த்து ஆச்சரியமான ஆச்சரியம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும். ‘பணியவெச்சோம்ல பொன்முடியை!’ என்று குஷியாகிவிட்டனர. DMK ponmudi Shock

அதேவேளையில் ’கவனிப்பெல்லாம் தி.மு.க. காரங்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கு இல்லையா? எங்க சைடு ஓட்டுக்கள் வேண்டாமா?கொடுத்தா எல்லாருக்கும் கொடுங்க, அதென்ன ஓரவஞ்சனை! பிறகு நாங்களும் ஓட்டு வாங்கி கொடுக்க மாட்டோம்’ என்று பொங்குகின்றனராம். போற பக்கமெல்லாம் பொன்முடிக்கு லாக்!தான் போல.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios