சூடிக்கொடுத்த ஆண்டாளை சில மாதங்களுக்கு முன் மோசமாக வர்ணித்தார் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கெதிராக மிகப் பெரிய போராட்டங்கள் இந்துக்கள் தரப்பிலிருந்து வெடித்தன. ‘வாய்க்கொழுப்பெடுத்த வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பெரும் குரல் எழும்பியது. ஆனால் மசியவில்லை வைரமுத்து. 

ஆனால் அடுத்த சில மாதங்களில் பாடகி சின்மயி மூலமாக வைரமுத்துவுக்கு எதிராக கிளம்பிய ‘மீ டூ’  புகார், கவிப்பேரரசின் சாம்ராஜ்ஜியம் ஆடியது. சின்மயி ஏதோ ஒரு கோபத்தில் வைரத்துக்கு எதிராக பாய்கிறார்! என்று சிலர் சப்பைக்கட்டு கட்டியபோது ‘என் தோழிக்கு நள்ளிரவில் போன் செய்து, உன் இடுப்பு ஒரு உடுக்கை! உன் மார்பு என் பஞ்சணை-ன்னு வழிந்தார் வைரமுத்து’ என்று ஒரு பெண் வெளியிட்ட வாட்ஸ் அப் வாய்ஸ் வைரலால் வைரமுத்துவின் ராஜாங்கம் சாய்ந்தது. 

மாதங்கள் பல வாகியும் இன்னமும் முழுமையாக வெளியே வரமுடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கி வேகிறார் வைரமுத்து. ‘ஆண்டாளை பழித்ததற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை இது.’ என்று ஆசுவாசப்பட்டனர் மக்கள். இந்நிலையில் இப்போது திராவிட கழக தலைவர் வீரமணி, பகவான் கிருஷ்ணருக்கு எதிராக பேசியிருக்கிறார். பொள்ளாச்சி பாலியல் கயவர்களின் முன்னாடியே கிருஷ்ணன் தான்! எனும் ரீதியில் அவர் பேசிய பேச்சுக்கு எதிராக கடுமையாக பொங்கி எழுந்துள்ளனர் இந்துக்கள். சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர் கண்டன ஆர்பாட்டங்கள்  நடந்துகொண்டிருக்கின்றன.

 

இந்நிலையில் ச்சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள்? வெச்சு செய்ய துவங்கிவிட்டனர் வீரமணியை. ‘நாடி நரம்பு தளர்ந்த நிலையிலும் வீரமணி இப்படி கூவுவதெல்லாம் தி.மு.க.வுக்காகத்தான். இந்து திருமணங்களை ஸ்டாலின் பழித்ததற்கும், இவர் கிருஷ்ணனை பழித்ததற்கும் என்ன பெரிய வித்தியாசம் வைரமுத்து, ஸ்டாலின், வீரமணி எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய வயதான மட்டைகள்தான். இந்து தெய்வங்களைப் பழிக்கப் பழிக்க இவர்களுக்கு சறுக்கல்கள்தான் அரசியலில். 

வடுகப்பட்டியிலிருந்து வந்த நாட்டுக்கட்டை வைரமுத்துவுக்கு சின்மயி எனும் பெண் மூலம் அமைந்தது ஆல்டைம் ஆப்பு. அதேபோல் இந்த வயதான கட்டை கி.வீரமணிக்கு யார் ரூபத்தில் ஆப்பு வரப்போகுதோ! தன்னை ‘வாழும் பெரியார்’ என்று சொல்லிக் கொள்வதில் சந்தோஷப்படுவார் வீரமணி. பெரியார் வயது வித்தியாசம் பார்க்காமல், ஈவிரக்கமில்லாமல் மணியம்மையை திருமணம் செய்து ‘பெண்ணுரிமை’ பேசினார். ஹும் இந்த வாழும் பெரியாருக்கு யாரால் தண்டனை வர இருக்கிறதோ!”என்று முழங்கியுள்ளார்கள்.