dmk party member sucide

இவரை 24 திமுக தலைவர், கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நிர்மலா சீதாராமன், வைகோ, உள்ளிட்டோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தனர். மேலும் மருத்துவர்களும் கருணாநிதி உடல் தேறி வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை எண்ணூரை சேர்ந்த, திமுக பிரமுகர் ராஜி (60) கருணாநிதியின் உடல்நலம் குறித்த வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக தலைவர் உடல் நலம் குறித்து வெளியான தகவலால் கடந்த 3 நாட்களாக உணவு சாப்பிடாமல்... தலைவா உன்னை இந்த நிலையில் பார்க்க முடியவில்லை என கூறிக்கொண்டு மனம் நொந்து ராஜி இருந்ததாகவும், இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.