Asianet News TamilAsianet News Tamil

அங்க 37.. இங்க 13 ஜெயிச்சும் சல்லிக்காசுக்கு வழியில்லாம போச்சு.. புலம்பி தீ்ர்க்கும் தி.மு.கவினர்..!

நடந்த முடிந்த தேர்தலால் மிகப்பெரிய சோகமும் உற்சாகமும் மக்களுக்கு ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டும் பார்க்கும் நபர்களிடையே புலம்பி தவிக்கிறார்கள். அதில் முக்கியமான கட்சியாக தி.மு.கதான் இருக்கிறது.

DMK party Lamentations
Author
Tamil Nadu, First Published May 24, 2019, 2:52 PM IST

நடந்த முடிந்த தேர்தலால் மிகப்பெரிய சோகமும் உற்சாகமும் மக்களுக்கு ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டும் பார்க்கும் நபர்களிடையே புலம்பி தவிக்கிறார்கள். அதில் முக்கியமான கட்சியாக தி.மு.கதான் இருக்கிறது. DMK party Lamentations

தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க லோக்சபா தேர்தலில் 37 இடங்கள் மினி சட்டமன்ற தேர்தலில் 13 இடங்களை தி.மு.க அள்ளியிருக்கிறது. இவர்களை எதிர்த்து பா.ஜ.க கூட்டணியோடு களம் இறங்கிய ஆளும்கட்சியான அ.தி.மு.க லோக்சபா 1 சட்டமன்ற இடைத்தேர்தல் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றிருக்கிறது. ஆளும்கட்சியான அ.தி.மு.க.விற்கு மத்தியில் அமைச்சரவையில் இடம் கிடைக்காத கவலையில் இருந்தாலும் தமிழக எதிர்கட்சியான தி.மு.க தான் மிகப்பெரிய கவலையில் இருக்கிறது. DMK party Lamentations

காரணம் மத்தியிலும் காங்கிரஸோடு அமைச்சரவையில் இடம்பிடிப்பதோடு மாநிலத்தில் ஆட்சி அமைக்க துடிதுடியாய் துடித்தது தி.மு.க. அதற்கேற்றார்போல் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் பிரச்சாரத்தின்போது தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்பதோடு மத்தியிலும் தி.மு.க முக்கிய அங்கம் வகிக்கும் என சொன்னார் ஸ்டாலின். இதனால் தி.மு.கவினர் உற்சாகம் அடைந்தன் தேர்தலுக்காக கடுமையாக உழைத்தனர்.

 DMK party Lamentations

ஆனால் தேர்தல் முடிவு மாநிலத்தில் லோக்சபா எம்.பி எண்ணிக்கை சாதகமாக வந்தாலும் சட்டமன்ற இடைதேர்தலில் எம்.எல்.ஏக்கான சீட் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. ஒருவேளை  தி.மு.க சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகமான இடத்தில் ஜெயித்திருந்தால் தி.மு.க ஆட்சி அமைவதற்கு வழியாக அமைந்திருக்கும் தி.மு.க.வினரும் உற்சாகத்தில் மிதந்திருப்பார்கள். இதுபோக தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சம்பாதித்து கொள்ளலாம் என்ற ஆசையும் தற்போது தவிடு பொடி ஆகிவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios