சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கொடிக்கம்பம் வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலேயே எந்த கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவுக்கு அதிக உயர கொடி கம்பம் வைக்க திமுக முடிவு செய்துள்ளது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை அருகே கருணாநிதியின் சிலையையும் அமைக்க முடிவு செய்து, அண்ணா சிலை அகற்றப்பட்டு, ஒரே இடத்தில் இரு சிலைகளையும் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் திறப்புவிழா டிசம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கும் முயற்சியிலும் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவுக்கு அதிக உயர கொடி கம்பம் வைக்க திமுக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 26, 2018, 12:47 PM IST