சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.,க்கள், கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் தி.மு.க. , மக்களவை எம்.பி.க்கள் குழு தலைவராக டி.ஆர்.பாலு,. துணை தலைவராக கனிமொழி, கொறாடாவாக ஆ. ராசா, பொருளாளராக பழனிமாணிக்கம், மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் குழு தலைவராக சிவா. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்

முன்னதாக நடந்த கூட்டத்தில் தி.மு.க.தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.