திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பெறுவதற்கு அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் மகளிர் அணித்தலைவர் கனிமொழி ஆகியோரிடையே போட்டி தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 19 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட பிற கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் எம்.பி. ஆகியுள்ளனர். இதேபோல் மாநிலங்களவையிலும் கணிசமான எண்ணிக்கையில் திமுகவிற்கு எம்.பி.க்கள் உள்ளனர்.

 

நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் கணிசமான எம்.பி.க்கள் இருப்பதால் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தற்போது போட்டி தொடங்கியுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2009 பதினான்காம் ஆண்டு வரை அதிமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர், மக்களவை குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளை டி.ஆர். பாலு. இதைப்போல் கனிமொழியும் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

 

தற்போது கனிமொழியும் டி.ஆர். பாலுவும் மக்களவைக்கு எம்.பி.யாக தேர்வாகியுள்ளனர். இதனால் மாநிலங்களவை குழுத் தலைவர் பதவியில் கனிமொழியால் இனி நீடிக்க முடியாது. எனவே நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை பெற்று விட கனிமொழி காய் நகர்த்தி வருகிறார். நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை பெற்றால்தான் டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டம் உள்ளிட்டவற்றில் திமுகவின் பிரதிநிதியாக கலந்து கொள்ள முடியும். 

மேலும் நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் பேச வேண்டியவர்கள் எழுப்ப வேண்டிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் அக்குழுவின் தலைவராக இருப்பவர்கள் தான் முடிவெடுக்க முடியும். எனவே இந்தப் பதவியைப் பெற்று விட வேண்டும் என்பதில் கனிமொழி தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் கனிமொழி, சீனியரான டி.ஆர். பாலு தான் இழந்த டெல்லி தொடர்புகளை மீண்டும் பெற நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார் என்கிறார்கள். 

இதனால் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை ஸ்டாலின் தனது தங்கையான கனிமொழிக்கு கொடுக்கப் போகிறாரா அல்லது தலைமை நிலைய செயலாளர் டி.ஆர். பாலுவுக்கு கொடுக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவி பெரும்பாலும் சீனியரான டி.ஆர். பாலுவை செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கனிமொழிக்கு மக்களவை குழு தலைவர் பதவி கொடுக்கப் படலாம் என்று சொல்லப்படுகிறது.