மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

 

தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. வெற்றி பெற்றவர்களில் சில எம்.பி.க்கள் சென்னையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.