திமுக புதிய எம்.பி.க்கள் அனைவரும் வைகோவை சென்று சந்தித்து ஆசி பெறுமாறு கூறி அதிர வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

திமுக எம்.பி.க்கள் ஆக தேர்வு செய்யப்பட்ட தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி உள்ளிட்டோர் நேற்று திடீரென மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் சென்று வைகோவை சந்தித்தனர். இதன் பிறகு மற்ற தொகுதிகளில் வென்ற திமுக எம்.பி.க்கள் வரிசையாக வைகோவை சந்தித்து திரும்பினர். திமுக எம்.பி.க்கள் அனைவரும் ஒரே நாளில் வைகோவை சென்று சந்தித்தது பல தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

ஏனென்றால் என்னதான் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் அதிமுக, திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. வைகோவும் கூட அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் ஒரு இடம் என்று அளவாகவே திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். கடந்த தேர்தல்களைப் போல அல்லாமல் இந்த தேர்தலில் வைகோவின் பிரச்சாரம் மிகவும் மந்தமாகவே இருந்தது. 

அப்படி இருந்தும் திமுக எம்.பி.க்கள் வரிசையாக சென்று வைகோவை சந்தித்து ஏன் என்ற ஒரு கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரித்தபோது தான் அறிவாலயத்திற்கு வந்த திமுக எம்.பி.க்கள் அனைவரையும் வைகோவிடம் சென்று ஆசி பெறுமாறு கூறி ஸ்டாலின் அனுப்பி வைத்தது தெரிவித்துள்ளது. தான் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அதற்கு காரணமானவர்களை வைகோவும் ஒருவர் என்று ஸ்டாலின் நம்புகிறார்கள். 

எனவே தான் வைகோவை சந்தித்து ஆசி பெறுமாறு கோரி தனது மகளை அனுப்பி வைத்துள்ளார் ஸ்டாலின். ஒரே நாளில் திமுக எம்.பி.க்கள் அனைவரும் தாயகம் அந்த தகவலை அறிந்து வைகோவும் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டார். தனக்கு இந்த அளவிற்கு பெருமை சேர்த்த ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைப்பது தனது அடுத்த இலக்கு என்று கூறிவிட்டு தாயகத்தில் இருந்து புறப்பட்டு உள்ளார் வைகோ.