Asianet News TamilAsianet News Tamil

எம்.பி. சீட்டுக்கு இருபது கோடி! ஃபைனான்ஸ் பண்ண நாங்க ரெடி... ஸ்டாலினை அதிரவைக்கும் தி.மு.க. புள்ளிகள்!

இந்தியாவின் ஹைடெக் முதல்வரான சந்திரபாபு நாயுடு தன் வீட்டுக்கு வந்து தன்னை தேசிய தலைவனாக்கி தழும்ப தழும்ப சந்தோஷப்படுத்திவிட்டு சென்றிருப்பதில் ஸ்டாலினுக்கு செம்ம சந்தோஷம்.

DMK MP Seat constituency 20 crore...Stalin tension
Author
Chennai, First Published Nov 10, 2018, 3:41 PM IST

இந்தியாவின் ஹைடெக் முதல்வரான சந்திரபாபு நாயுடு தன் வீட்டுக்கு வந்து தன்னை தேசிய தலைவனாக்கி தழும்ப தழும்ப சந்தோஷப்படுத்திவிட்டு சென்றிருப்பதில் ஸ்டாலினுக்கு செம்ம சந்தோஷம். அதேவேளையில் தன் கட்சியிலிருக்கும் இரண்டு முக்கிய நபர்கள் செய்து கொண்டிருக்கும் அட்ராசிட்டிதான் அவரை கடுமையாக கடுப்பேற்றி இருக்கிறது. விவகாரத்தின் ஹைலைட்ஸ் இதுதான்... DMK MP Seat constituency 20 crore...Stalin tension

* ஸ்டாலினின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் இரண்டு முக்கிய தி.மு.க. நிர்வாகிகள் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தங்கள் ஆட்களை அனுப்பி, அங்கே போட்டியிட விருப்பமுள்ள தி.மு.க.வினரை ஸ்கேன் செய்து வைத்துள்ளார்களாம். 

* அந்த நபர்களை தங்கள் பிரதிநிதிகளை சந்திக்க வைத்து, ‘இருபது கோடி கொடு, முப்பது கோடி கொடு எம்.பி. சீட் வாங்கி தர்றோம்.’ என்று ஆசை காட்டுகிறார்களாம். 

* இருபது கோடி வரைக்கும் இறங்கி வர ரெடி. பேமெண்டை ஓ.கே. செய்தால் சீட் வாங்கி கொடுப்பதில் துவங்கி, பிரச்சாரம், பணப்பட்டுவாடா பஞ்சாயத்து, பிரச்சாரம் முடிந்து பூசணிக்காய் உடைப்பு வரை எல்லாவற்றையும் காண்ட்ராக்ட் எடுத்து செய்து தருகிறோம் என கேன்வாஸ் செய்கிறார்களாம். 

* இத்தனை கோடி பணத்துக்கு திடீர்ன்னு என்ன பண்ண? என யோசிக்கும் நபர்களிடம், ’உங்ககிட்ட இவ்வளவு சொத்துக்கள் இருக்குது. இதை விற்றால் இவ்ளோ கிடைக்கும், அடமானம் வைத்தால் இவ்ளோ கிடைக்கும். வெளியில இவ்ளோ வட்டி, ஆனா நாங்களோ குறைஞ்ச வட்டிக்கு தர்றோம்.’ என்று பேசி அதிர வைக்கிறார்களாம். 

* உறுதியாய் ஜெயிக்க வாய்ப்புள்ள நபர்களிடம் ‘இருபது கோடி கொடுத்தால் சீட் வாங்கி தந்து, பிரச்சாரம் முடியும் வரை எல்லாமே பண்ணி தர்றோம். ஜெயிச்சு நம்ம கூட்டணி ஆட்சி அமைந்தால் நம்ம கட்சிக்கு சில மத்திய அமைச்சர்கள் பதவி உறுதி. அதையும் உங்களுக்கு வாங்கி தர்றோம். அதுக்கு தனி பேமெண்ட்.’ என்கிறார்களாம். 

* ஜனநாயக இயக்கம்! என பெயரெடுத்த தி.மு.க.வினுள் இந்த இரு முக்கிய புள்ளிகளும் செய்யும் செயலால் ‘காண்ட்ராக்ட் கட்சி’ என பெயராகிவிட்டது. 

* மேற்படி தகவல்கள் ஸ்டாலினின் காதுகளுக்குப் போக, மனிதர் கொதித்துக் கிடக்கிறார். விரைவில் அதிரடி எதிர்பார்க்கப்படலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios