Asianet News TamilAsianet News Tamil

#BREAKING கட்சியில் நீக்கப்படுகிறாரா திமுக எம்.பி.? முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் (55) என்பவர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கடலூர் எம்.பி., ஆலையின் உரிமையாளருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

dmk mp ramesh murder case...Urgent consultation with CM Stalin senior executives
Author
Tamil Nadu, First Published Oct 9, 2021, 1:40 PM IST

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட  நடவடிக்கைகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் (55) என்பவர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கடலூர் எம்.பி., ஆலையின் உரிமையாளருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

dmk mp ramesh murder case...Urgent consultation with CM Stalin senior executives

இதில், கோவிந்தராஜ் செப்டம்பர் 20-ம் தேதி உயிரிழந்தார் எனக்கூறி, அவரது இறப்புக்கு கடலூர் எம்.பி. ரமேஷ் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான விசாரணைக் குழு விசாரணை நடத்திவந்தனர்.

dmk mp ramesh murder case...Urgent consultation with CM Stalin senior executives

இதையடுத்து கொலை வழக்காக பதிவுசெய்து, 5 பேரை ஏற்கெனவே கைதுசெய்த போலீசார், நேற்று கொலை வழக்கில் கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் பெயரையும் இணைத்து வழக்குப் பதிவுசெய்துள்ளனர். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை கைதுசெய்ய மக்களவையின் செயலரிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், அதையடுத்து அவரை விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

dmk mp ramesh murder case...Urgent consultation with CM Stalin senior executives

இந்நிலையில், கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கொலை வழக்கில் எம்.பி. சிக்கி இருப்பதால், அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றதுமே குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios