Asianet News TamilAsianet News Tamil

அமலாக்கத் துறையை வைத்து பாஜக உறுப்பினர் சேர்க்கை நடத்துது... ப. சிதம்பரம் விவகாரத்தில் திமுக எம்.பி. ஏதோ சொல்ல வர்றாரு!

ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கைகளை சிபிஐயும் அமலாக்கத்துறையும் தொடங்கின. ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்துக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு ப.சிதம்பரம் இல்லாததா ,அதிகாரிகள் திரும்பிவந்துவிட்டனர்.
 

DMK MP on P.Chidambaram issue
Author
Delhi, First Published Aug 21, 2019, 6:31 AM IST

பாஜக அரசுக்கு எதிராக யாரும் பேசவே கூடாது என்பதற்காக ப. சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐயும் அமலாக்கத் துறையும் சென்றுள்ளது என்று திமுக எம்.பி.யும் அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.DMK MP on P.Chidambaram issue
ஐ.என்.எஸ். வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முன் ஜாமீன் பெற்றுவந்தார். இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐயும் அமலாக்கத்துறையும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன. இதையடுத்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமினை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கைகளை சிபிஐயும் அமலாக்கத்துறையும் தொடங்கின. ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்துக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு ப.சிதம்பரம் இல்லாததா ,அதிகாரிகள் திரும்பிவந்துவிட்டனர்.DMK MP on P.Chidambaram issue
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகியுள்ளார். இந்நிலையில் ப.சிதம்பரத்தை கைதுசெய்ய சிபிஐ அமலாக்கத் துறை எடுத்துவரும் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பக திமுக செய்தித்தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், “மற்ற கட்சிகள் எல்லாம் மக்களிடம் நேரடியாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள்ள். ஆனால், பாஜக மட்டும்தான் அமலாக்கத்துறையை வைத்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. பாஜக அரசுக்கு எதிராக யாரும் பேசவே கூடாது என்பதற்காக  அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. அதற்காகத்தான் ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐயும் அமலாக்கத் துறையும் சென்றுள்ளது. இதை ப.சிதம்பரம் சமாளிப்பார்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

DMK MP on P.Chidambaram issue
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பூ குறித்து தெரிவிக்கையில், “இந்த வழக்கை ப.சிதம்பரம் சட்டரீதியாகச் சந்திப்பார். ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ சென்றது பாஜகவின் பயத்தைக் காட்டுகிறது” என தெரிவித்தார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios