தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார் கடுமையான உழைப்பாளி தமிழிசை என அவர் புகழ்ந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன். கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து  போட்டியிட்டு தோல்வி அடைந்தார்,  இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வேறொருவர்  நியமிக்கப்படுவார் என தெரிகிறது. ஆளுனராக தாம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, ஆண்டவனுக்கும் ஆண்டு கொண்டு இருக்கும் மோடிக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்னுடைய கடுமையான  உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமான இந்த பதவியை கருதுகிறேன், 

உழைத்தால்  உயரலாம் என்பதை  பாரத பிரதமர் மோடியும்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எனக்கு பதிவி வழங்கியதின் மூலம் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத நிலையில் பதிவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது அன்புவைத்து, எனக்கு ஆதரவு அளித்து சிறப்பாக பணியாற்றி ஒத்துழைத்த தமிழக பாஜக தொண்டர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழிசை கடுமையான உழைப்பாளி அவருக்கு ஆளுனர் பதிவி கிடைத்திருப்பது  மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, நிச்சயம் அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்று  நம்புகிறேன் என கனிமொழி கூறியுள்ளார்.