மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இந்திய பெரும் பணக்காரர்களின் ஒருவரான கலாநிதி மாறனின் சகோதரர் தயாநிதிமாறன். 

முன்னாள் மத்திய அமைச்சரான இவர் மறைந்த முரசொலிமாறனின் மகனும், கருணாநிதியின் பேரனும் ஆவார். அதனால் தான் என்னவோ மிகுந்த செல்வாக்கோடு கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் வளர்க்கப்பட்டனர். அதேபோன்று தான் தங்களுக்கென தொழில் வளத்தையும் பெருக்கி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் வலம் வருகின்றனர். 

தேர்தல் களத்தில் இந்த காரணங்களை இறுக்கமாக பிடித்துக்கொண்ட பாமக இளைஞரணி அணி தலைவரான அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தின் போது இந்திய பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இருக்கும் தயாநிதிமாறன் மக்களுக்கு சேவை செய்ய மாட்டார். சென்னை போர்ட் கிளப்பில் உள்ள அவரது வீட்டு பக்கம்கூட பொதுமக்கள் செல்ல முடியாது. அணுகுவதற்கு எளிதானவர் இல்லை என கடுமையாக விமர்சித்து வீதிவீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

இவரது இந்த பேச்சு தேர்தல் களத்தில் பரபரப்போடு இயங்கி வந்த கலாநிதி மற்றும் தயாநிதி மாறனை மிகப்பெரிய அளவில் எரிச்சலடைய வைத்தது. இந்தநிலையில் தான் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அன்புமணி நிறுத்திய சாம்பாலை வீழ்த்தி வெற்றி தயாநிதி வெற்றி பெற்றதோடு, அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சாம்பால் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். 

இந்நிலையில் அன்புமணி தேர்தல் களத்தில் கூறி குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது செயல்பாடுகளை தயாநிதிமாறன் மாற்றியமைத்துள்ளார். பெரிய இடத்து பிள்ளை என்ற இமேஜை உடைத்து மத்திய சென்னை உட்பட்ட துறைமுகம் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்து அங்கே நாற்காலிபோட்டு அமர்ந்து பெண்களுக்கு தண்ணீரை பிடித்து கொடுத்தார் தயாநிதிமாறன். இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள், தயாநிதிமாறனின் செயல்பாடுகளை கண்டு வியந்து போயினர்.