புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார். 

திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சில மருத்துவமனைகளில் அவருக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளாததையடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பரமேஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இன்று பிற்பகல் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இன்று இரவு 7 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 53. பரமேஸ்வரியின் மறைவிற்கு, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலரும் ஆ.ராசாவின் மனைவி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.