Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் திடீர் உத்தரவு... சென்னை விரையும் திமுக எம்எல்ஏக்கள்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

dmk mlas meeting
Author
Chennai, First Published Feb 7, 2019, 1:28 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  dmk mlas meeting

தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதியமைச்சர் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி முதல் 16-ம் வரை 5 நாட்கள் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வர உள்ளதால் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. dmk mlas meeting

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக பட்ஜெட் மற்றும் மக்களவை தேர்தல், இடைத்தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios