Asianet News TamilAsianet News Tamil

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..!

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரேலா மருத்துவமனை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். 

DMK MLA J.Anbazhagan Health Condition improvement...real hospital doctor information
Author
Chennai, First Published Jun 5, 2020, 3:13 PM IST

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரேலா மருத்துவமனை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன் கடந்த சில நாட்களாக ஒன்றிணைவோம் என்ற திமுக திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிலையில்,  திடீரென நேற்று முன்தினம் ஜெ.அன்பழகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

DMK MLA J.Anbazhagan Health Condition improvement...real hospital doctor information

இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது உடல்நிலைக் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

DMK MLA J.Anbazhagan Health Condition improvement...real hospital doctor information

இந்நிலையில், ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் கூறிகையில் ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை 90 சதவீதமாக இருந்த நிலையில் 45 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் அனைத்து வித உதவிகளையும் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என மருத்துவர்கள் கூறினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios