dmk mla inspection ration shop

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளன. தமிழக அரசின் செயல்பாடின்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பொருட்கள் வழங்கப்படாத்தால் திருவண்ணாமலை, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நியாவிலைக் கடைகள் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்தச் சூழலில் திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் உள்ள நியாவிலைக்கடைகளில் அதிரடி ஆய்வை மேற்கொண்டார்.

அப்போது சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று அவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நியாவிலைக்கடைகளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்துமாறு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

திமுக உறுப்பினர்கள் 80 க்கும் மேற்பட்டோர் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்திருப்பதால் இவ்விவகாரம் பட்ஜெட் கூட்டத் தொடரில் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது