திண்டிவனம் அருகே திமுக எம்.எல்.ஏ. சீத்தாபதி சொக்கலிங்கம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம். இவர் நேற்று திண்டிவனம் அருகேயுள்ள பாங்குளத்தூர் சென்று விட்டு, இரவு 7.30 மணியளவில் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காரை ஆவணிப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளி (27) ஓட்டி வந்தார். பாங்குளத்தூர் அடுத்த பச்சைவாழியம்மன் கோயில் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.

இதனையடுத்து, சாலையோர இருந்த புளி மரத்தில் மோதிய பிறகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம் மற்றும் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து, அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடு திரும்பினார்.

இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.