தொண்டர்களின் அடாவடி செயல்களால் அவ்வப்போது திணறி வரும் திமுக இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஓசி பிரியானி, இப்போது ஓசி செல்போனாக அதிரடி கிளப்பி வருகிறது. 

விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு  உணவகத்தில் அந்த பகுதி திமுக பிரமுகர் யுவராஜ பிரியாணிக்காக சண்டை போட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது. திமுக பிரமுகர்கள் திருவண்ணாமலையில் செல்போன் கடைக்குள் புகுந்து தாக்கியதும் அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிதாக செல்போன் விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது.

 

திருச்சி பூங்கா நகர், கம்பரசன் பேட்டையை சேர்ந்தவர் குடமுருட்டி என்கிற ஆறுமுகம். இவர் அப்பகுதி தி.மு.க கட்சி பிரதிநிதியாக இருக்கிறார். இவருடைய அண்ணன் அந்த பகுதியில் தி.மு.க நிர்வாகியாக இருக்கிறார். இந்த நிலையில், சஞ்சய் காந்தி நகர் பகுதியில் சென்ற திங்கள் கிழமை இரவு ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மின் விளக்குகள் அணைந்துள்ளன. அப்போது அவருடைய செல்போன் தொலைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பகுதிநேர ஊழியராக பணியாற்றும் கல்லூரி மாணவர் ரஞ்சித் அந்த வழியே வந்திருக்கிறார். அவரை வழிமறித்த ஆறுமுகம் தனது செல்போனை இருளில் தேடுவதற்காக ரஞ்சித்தின் போனை வாங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து ரஞ்சித் தனது போனை திரும்பக் கெட்டுள்ளார். ஆனால் திருப்பித் தர மறுத்த ஆறுமுகம் மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

அப்போது தனது போனை ஆறுமுகத்திடம் இருந்து பறித்துக் கொண்டு தான் வேலை செய்யும் இடத்திற்கு  ரஞ்சித் ஓடியுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் சென்ற ஆறுமுகம் கட்டைகளைக் கொண்டு ரஞ்சித்தை சரமாரியாக தாக்கியுள்ளார். அதற்குள் ரஞ்சித்துடன் பணியாற்றுவோர் அங்கு விட்டனர். இதனையடுத்து ரஞ்சித் மலை கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆறுமுகத்தை ஆயுதத்தை வைத்திருத்தல், அவதூறாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கூறியும் அவரது கட்சித் தொண்டர்கள் அடாவடிகளை தொடர்ந்து வருகின்றனர்.