சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்/45, என்.ஆர்.ஐகளிடம் இருந்து கடன் வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பல கோடி வரை மோசடி செய்துள்ள இவரை மத்தியகுற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பார்ச்சனர் உள்ளிட்ட 5 லேட்டஸ்ட் மாடல் கார்கள்,  தங்க நகைகள், வங்கி பாஸ் புக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வில்லிவாக்கத்தை சேர்ந்த முத்துவேல் தமிழை கூட சரியாக எழுத படிக்க தெரியாதவர். ஆரம்பத்தில் சென்னையில் சைக்கிள்,இரு சக்கர வாகனம்,கார் திருட்டில் ஈடுப்பட்டுவந்த முத்துவேல் ஆந்திராவில் பாதிரியார் ஒருவரை கொலை செய்து பணத்தை சுருட்டி வந்தாக கூறப்படுகிறது. இதனால் பிரபல ரவுடி தென்னுடன் நெருக்கமான இவர் பல குற்றவழக்குகளில் ஈடுப்பட்டு வந்தார்.

நாளடைவில், பல விதமானமோசடிகளில் இறங்கினார். எல்லாமே நிதி மோடிகள் தான். ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் ஏழை மக்களிடம் லோன் வாங்கி தருவதாகவும், பண முதலாளிகளிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு என்.ஆர்.ஐகளிடம் கடன் உதவி வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். 

பத்திரிக்கைகளில் தனக்குத் தானே பிறரது பெயரில் மெகா சைஸ் விளம்பரங்கள் தந்து கொண்ட இவர் பெரிய போஸ்டர்கள் அடித்துஊர் முழுவதும் ஒட்வதும் வாடிக்கை. கோயில் கும்பாபிஷேகமா, நோட்டு புக்ஸ் வாங்க வேண்டுமா.. முத்துவேலை கேட்டால் போதும் பணம் கொட்டும். மேலும் லோக்கல்அரசியல்வாதிகள், தாதா கும்பல்களுக்கும் உரிய கப்பம் கட்டி அவர்களை தனக்கு ஆதரவாக வைத்திருந்தார்.

மேலும் வில்லிவாக்கத்தில் உள்ள பிரபல கொலை குற்றவாளிகளான குறளரசன், அருப்பு,  விக்கி,சங்கர் உள்ளீட்டோர் ஆதரவில் வில்லிவாக்கம் பகுதி முழுவதும் பல இடங்களில் பொதுமக்களை மிரட்டி சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அவரது அக்கா கோபிலதா திமுக வழக்கறிஞர் பிரிவு பகுதி துணை அமைப்பாளராக உள்ளார். அவரது துணையுடனும் தனக்கு உள்ள பண பலத்துடன்  திமுக தலைமையுடன் நெருக்கமான இவர் வில்லிவாக்கம், ராஜமங்கலம்,கௌத்தூர் பகுதிகளில் புதியதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிட நிருவனங்களை மிரட்டி வீடுகளையும்,சொத்துகளையும் வாங்கி வைத்துள்ளார். 

மெட்ராஸ் படத்தில் வருவது போல அரசியல் சுவர் விளம்பரங்களை எழுத ரவுடிகளின் துணையுடன் மற்ற கட்சியினரை மிரட்டி திமுக விளம்பரங்களை எழுதியுள்ளார். பண மோசடி வழக்கில் தற்பொழுது மத்திய குற்றபிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள முத்துவேலை விசாரணை செய்தால் திமுகவின் மிகப்பெரிய முதலைகள் சிக்குவார்கள் எனத்தெரிகிறது.