சென்னை, விருகம்பாக்கத்தை சார்ந்த வாலிபர் செல்வகுமார் என்பவர் சுஜிதா என்னும் பெண்ணை கடந்த 3 வருஷமாக காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்ததும் அந்த பெண்ணை வேறுஒருவருக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யபட்டதால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி செல்வகுமாரை கல்யாணம் செய்து கொண்டார்.

ஆனால் பெண்ணின் உறவுக்காரரான தி.மு.க வை சேர்ந்த ர.கோட்டி, பாபு, வழக்கறிஞர் சாந்தகுமார் மற்றும் 20க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் அந்த வாலிபரின் தம்பி மற்றும் நண்பர்களை அடித்து துன்புறுத்தி, துப்பாக்கி வைத்து மிரட்டி இரவுக்குள் அந்த காதல் ஜோடியை கண்டுபிடித்துவிட்டனர்.

அந்தப் பெண்ணை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்த வாலிபரையும், அந்த வாலிபரின் தம்பி மற்றும் நண்பர்களை தனது அலுவலகத்திற்கு இழுத்துச்சென்று விட்டனர். அப்போது தன்னுடன் வந்த ரவுடிகளுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு உருட்டுக்கட்டையால் இரும்பு கம்பியால், அடித்து காரில் ஏற்றி ரோட்டில் தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

தற்போது அந்த இளைஞர்கள் படுகாயதுடன் அனைவரும் அரசு ஆம்புலன்ஸ் 108க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.