தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்த பூத்திலேயே அதிமுகவை காட்டிலும் திமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. நேற்று மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டன. திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் 1,29,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். சரவணனை தோற்கடித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனீயைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே மெகா வெற்றியை பெற்றுள்ளது. முதல்வர், துணைமுதல்வர் என இருவரும் தங்களது இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கவனம் இருந்தது அதில், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் டெல்லிவரை கவனம் பெற்றுள்ளார் ஆனால், எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சேலத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன், முதல் சுற்றிலிருந்து முன்னிலை வகித்தார்.

முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சேலம் மக்களவை தொகுதி உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, இந்த தேர்தலில் மெகா கூட்டணி, ஆளுங்கட்சி செல்வாக்கு, பணபலம் என ஏக செல்வாக்குடன் அதிமுக களம் இறங்கியதால் எப்படியும் அதிமுக மூன்றாவது முறையாக சேலம் மக்களவை தொகுதியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படு தோல்வியே மிஞ்சியது.

இதனால், கூட்டணி காட்சிகள் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல தனது சொந்த கட்சியிலுள்ளவர்கள் மத்தியிலும் பெரும் அசிங்கத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சரி தோல்வி சகஜம் தான் என எடுத்துக்கொண்டாலும், தனது சொந்த ஊரில் அதிமுகவிற்க்கே வாக்கு அதிகமாக விழுந்துள்ளது. சேலம் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதி முதல்வர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியாகும். தனது சொந்த  ஊரான சிலுவம்பாளையத்தில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேரதலின் போது வரிசையில் நின்று வாக்களித்தார். 

ஆனால் அவர் வாக்களித்த தனது சொந்த ஊர் பூத்திலேயே அதிமுகவை காட்டிலும் சுமார்  800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது திமுக. முதல்வரின் சொந்த ஊரிலேயே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக இவ்வளவு வாக்கு விழுந்துள்ளது அதிமுகவிரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.